கோவையில் திமுக பிரமுகர் வீட்டில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்; போலீசார் தீவிர விசாரணை

கோவை: கோவை வடவள்ளி பகுதியில் திமுக பிரமுகர் ஆனந்தனுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்த இருவர் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக மாற்றி வருவதாக எழுந்த புகாரின்பேரில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்



கோவை: கோவை வடவள்ளி பகுதியில் திமுக பிரமுகர் ஆனந்தனுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்த இருவர் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக மாற்றி வருவதாக எழுந்த புகாரின்பேரில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கோவை வடவள்ளி அருகே உள்ள லட்சுமி நகரில் தி.மு.க. பிரமுகர்

ஆனந்தனுக்கு சொந்தமான

சொகுசு பங்களா ஒன்று உள்ளது. 

இவர் இந்த பங்களாவை ஷேக் மற்றும் ரசித் ஆகிய இருவருக்கும் வாடகைக்கு கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் இவர்கள் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பங்களாவில் பதுக்கி வைத்து, பல்வேறு வகையில் பண மோசடிகள் செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், அந்த பங்களாவிற்கு அடிக்கடி சந்தேகத்திற்குரிய நபர்கள் பலர் வந்து சென்றுள்ளனர். இப்படியிருக்க இந்த சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மத்திய புலனாய்வுத் பிரிவினர் கோவை மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து பேரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர் அந்த பங்களாவில் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 268 கட்டுகள் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பழைய ரூபாய் கட்டுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல திமுக பிரமுகர் ஆனந்தனிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

போலீசார் சோதனைக்காக வந்த பொழுது தப்பிச்சென்ற இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...