காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படலாம் எனவும் இதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற தேவையில்லை எனவும் தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோவையில் தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பன்மாநில நதிநீர் வழக்கு சட்டம் 1956 உட்பிரிவு 6 ன்படி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. அதே சட்டத்தின் உட்பிரிவுகள் 6 ஏ (1) மற்றும் 6 (2)- யின்படி பாராளுமன்றத்தின் மேற்பார்வைக்கு அனுப்பப்படாமலேயே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படலாம். இதற்கு முன்னுதாரணங்களாக நர்மதா நதி கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் கிருஷ்ணா - கோதாவரி நதிகளின் மேலாண்மை வாரியங்கள் பாராளுமன்ற ஒப்புதலின்றி அமைக்கப்பட்டுள்ளது ஆகும். எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு முழு உரிமை உண்டு. பி.ஏ.பி வாய்க்கால் திட்டத்தில் எழும் விவகாரங்களை இரு மாநில அதிகாரிகள் மட்டத்திலேயே தீர்க்கப்பட்டு வருவதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு ஓரவஞ்சனையுடன் செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த தமிழக அரசுக்கு முழு உரிமை உண்டு என தெரிவித்தனர்.