இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வருமான வரி குறித்து கருத்தரங்கு

இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு (CII) தனது உறுப்பினர்களுக்காக வருமான வரி குறித்து (TDs ) கருத்தரங்கு நடத்தியது. இக்கருத்தரங்கு "பெரு நிறுவன இணைப்பு மற்றும் நேருக்கு நேர் கலந்தாய்வு" என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் வருமான வரித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நேத்ரா ஜெயவர்தனவேலு குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் நடைமுறை சவால்களை பற்றி ஆடிட்டர் கார்த்திகேயன் விளக்கம் அளித்தார். 



பின்னர், வருமான வரி ஆணையாளர் பாலசுப்ரமணியன் வரி பிடிப்பாளர்களின் வரி பிடித்தம், அதன் முக்கியத்துவம் மற்றும் தேவையை பற்றி அவர் பேசுகையில், வரி பிடித்தம் செய்யாமல் கொடுக்கப்படும் தொகையை செலவுகணக்கில் எழுத வருமான வரிச்சட்டம் அனுமதிப்பதில்லை. என்றும் வரிப்பிடித்தம் செய்து அதை அரசாங்கத்திற்கு குறித்த காலத்தில் கட்டாதவர்கள் மீது சிறை தண்டனை என்றும் கூறினார். வரிப்பிடித்தம் செய்த பின் அது உடனடியாக அரசுக்கு சொந்தமானது என்றும் அது வரி பிடிப்பாளர்களின் மற்ற செலவுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள கூடாது என்றும் இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.

வருமான வரி துறை இணை ஆணையர் வின்சன்ட் சகாயராஜ், வருமான வரி உதவி ஆணையர் கல்பலதா, வருமான வரி அதிகாரி நாகராஜன் மற்றும் பிற அதிகாரிகள் பல்வேறு சட்டங்கள் மற்றும் (TDs) விதிகள் குறித்து விளக்கினர்.



இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் வருமான வரி பற்றிய கேள்விகளுக்கான விளக்கங்களை பெற்றுக் கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...