இந்திய ராணுவத் துறையில் காலியாக உள்ள 24 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் அதற்கான ஆட்சேர்ப்பு முகாம் கோவையில் செயல்பட்டு வரும் பி.ஆர்.எஸ். ராணுவ பயிற்றி மைதானத்தில் புதனன்று (இன்று) அதிகாலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்காக, கேரளம், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் செவ்வாயன்று இரவு முதலே கோவை பி.ஆர்.எஸ். ராணுவ பயிற்சி மையம் அருகே குவிந்தனர்.

இந்நிலையில், போதுமான பாதுகாப்பு வசதிகளை ராணுவ பயிற்சியாளர்கள் ஏற்படுத்தித் தராததால் அந்த இளைஞர்கள் அனைவரும் பயிற்சி மையத்தின் வெளியே உள்ள அவினாசி சாலையிலேயே படுத்து உறங்கினர்.
சாலை விபத்து, சாலையோரம் உறங்கியவர்கள் மீது வாகனம் ஏறி விபத்து என அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணம் உள்ள நிலையில், ராணுவத்தில் சேர்ந்து நாட்டைப் பாதுகாக்கும் ஆர்வத்துடன் வந்த இளைஞர்களுக்கு எவ்வித பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தித் தராமல் அவர்கள் பிளாட் பாரங்களில் படுத்துரங்கிய காட்சி காண்போரை நெகிழ வைத்தது.