பாலக்காடு: பாலக்காட்டில், சேற்றில் மூழ்கி யானை பலியானது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மலம்புழா வனப்பகுதியில், நேற்று முன்தினம், வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்பகுதியிலுள்ள குளத்தில், குட்டி யானை இறந்து கிடந்தது தெரிய வந்தது.
யானையின் சடலத்தை மீட்டு, கால்நடை மருத்துவர்கள் தலைமையில் பிரேத பரிசோதனை நடந்தது. இதில், சேற்றில் மூழ்கி யானை பலியானதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.
யானையின் சடலத்தை மீட்டு, கால்நடை மருத்துவர்கள் தலைமையில் பிரேத பரிசோதனை நடந்தது. இதில், சேற்றில் மூழ்கி யானை பலியானதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.