கோவை மாவட்ட இந்து முன்னணியின் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டு வந்த சசிக்குமார் (36) கடந்த மாதம் 22ம் தேதியன்று மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் அவ்வமைப்பினரால் கலவரங்கள் ஏற்பட்டன. கடைகள், வாகனங்கள், பேருந்துகள் என அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து சசிக்குமாரின் இறுதி ஊர்வலத்திலும் வாகனங்களுக்கு தீ வைத்து கொழுத்தி கலவரத்தில் ஈடுபட்டனர். இதற்கு போலீஸ் வாகனமும் இரையாகியது.
இதுகுறித்து, வழக்கு பதிவு செய்து கலவரத்தில் ஈடுபட்ட 800க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, இவர்களுக்கு ஜாமீன் கோரி கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கலவர வழக்கில் கைதான 250 பேருக்கு மட்டும் நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி பொங்கியப்பன் புதனன்று உத்தரவிட்டார்.