கோவை, ஈச்சனாரி மேம்பாலம் அருகில் கஞ்சா விற்கப்படுவதாக போத்தனூர் காவல் நிலையத்திற்கு செவ்வாயன்று தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அப்பகுதியில் உள்ள கல்லூரியின் அருகில் சந்தேகத்திற்குறிய வகையில் நின்றுகொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், விற்பணைக்காக அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் அந்த வாலிபர் மதுக்கரைப் பகுதியைச் சேர்ந்த அத்துல்லா என்பவரது மகன் அபுதாகிர் (30) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, கோவை சிட்கோவை அடுத்த பிள்ளையார்புர பேருந்து நிலையம் அருகில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போத்தனூர் காவல் துறையினருக்கு தகவல் வந்ததையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த காவல் துறையினர் அங்கு இருந்த பிள்ளையார் புரத்தைச் சேர்ந்த சேக் பரிதி என்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கஞ்சா வைத்திருந்ததைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
கோவை, போத்தனூர் பகுதியில் நேற்று ஒரே நாளில் 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.