பெரியதடாகம் பகுதியில் மயங்கிய பெண் யானை - வனத்துறையினர் தீவிர சிகிச்சை


மேற்கு தொடர்ச்சி மலையடிவாரமான கோவை மாங்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெரியதடாகம், கரியாங்குட்டை அருகே காட்டு யானை ஒன்று படுத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறைமருத்துவர் மனோகரன் தலைமையில் ஆனைகட்டி கால்நடைத்துறை மருத்துவர் ஜெயந்தி  மற்றும்  வனத்துறையினர் அங்குசென்று பார்த்த போது சுமார் 30 வயதுமதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உடல் நலகுறைவினால் சோர்வுடன் படுத்திருப்பதைகண்டனர். 

இதை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ள அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு  வருகின்றனர். யானை படுத்திருக்கும் பகுதிக்கு அருகாமையில் 5 யானைகள் கொண்ட கூட்டம் உள்ளதால் வனத்துறையினர் தீவிர  கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள யானை கடந்த 6 மாத காலத்திற்கு முன்பு தான் குட்டி ஈன்றிருந்தாக கூறப்படுகிறது. 



கடந்த வாரம் மதுக்கரைவனப்பகுதியில் வளையன்குட்டை பகுதியில் யானை ஒன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்த  நிலையில் தற்போது மீண்டும் ஒரு யானை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது  வன உயிரினஆர்வலர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...