கோவை: சுந்தராபுரம் சாலை பகுதியில் அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இரவு 12 மணியளவில் உக்கடம் பகுதியில் இருந்து பழனி செல்லும் அரசுப் பேருந்து சுந்தராபுரம் அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்து கொண்டிருந்த லாரி நிலை தடுமாறியதில், இரண்டு வாகனங்களுக்கு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயம் ஏற்பட்டவர்களை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.