ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் தேர்விற்கான எழுத்துத் தேர்வு வரும் 22ம் தேதியன்று கோவை மாவட்டத்தில் மொத்தம் 16 மையங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
இத்தேர்வுக்கு வரும் தேர்வர்கள் அனைவரும் கைபேசி, கணினி, கால்குலேட்டர் மற்றும் மின்னணு கருவிகளை எடுத்துவருவதை தவிர்க்க வேண்டும்.
தேர்வர்கள் காலை 9 மணிக்குள்ளேயே தேர்வு மையத்திற்குள் வந்துவிட வேண்டும். நேரம் கடந்து வருபவர்கள் முதன்மை கண்காணிப்பாளரின் அனுமதியுடன் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
மேலும், அனைத்து தேர்வர்களும் காவல்துறை அலுவலரின் உதவியுடன் முழுச்சோதனைக்குப் பிறகே தேர்வு மையத்தினுள் அனுமதிக்கப்படுவர் என கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.