ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி அன்று பணியின் போது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடுமுழுவதும் உள்ள காவலர்களுக்கு வீர வணக்க நாள் இன்று அனுசரிக்கப்பட்டது வருகிறது.
1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி ‘காவலர் வீரவணக்க நாள்’ அனுசரிக்கப்படுகிறது.
இதனை அடுத்து இன்று, சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இருக்கும் வீரவணக்க நாள் நினைவிடத்தில் டிஜிபி ராஜேந்திரன், காவல் ஆணையர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பணியின் போது உயிர் நீத்த காவலர்களின் நினைவாக இந்த வீர வணக்கம் நாள் கடைபிடிக்கப்பட்டது. மேலும், தலைநகர் தில்லியிலும் சானக்கியாபுரி பகுதியில் உள்ள காவலர்கள் நினைவிட மைதானத்தில் காவலர்கள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று உயிர் நீத்த காவலர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.