கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் நவாப்கான் (48). இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு, கடந்த மாதம் நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடந்து கோவை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், வெள்ளியன்று (இன்று) மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, கோவை அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் பலத்த காவல் துறை பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.