கோயம்புத்தூர், காந்திப்பார்கில் உள்ள கே.பி.ஆர் ஐஏஎஸ் அகாடமி பயிற்சி வளாகத்தில் நேற்று மாலை 5.00 மணியளவில் திடீர் என ஏற்பட்ட நச்சுப்புகையினால் அங்கு படித்துக்கொண்டிருந்த காயத்ரி, அரங்கநாதன், விஜயலட்சுமி, முத்துமணிகண்டராஜா, கிரிராஜன் ஆகிய மாணவர்களுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து, உடனடியாக அரசு மருத்துகல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு சிறப்பான சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். இவ்விபத்தில் சக்திவேல் என்ற மாணவன் மருத்துமனை அழைத்துசெல்லும் வழியிலேயே மரணமடைந்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன், மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே அர்ச்சுனன், மருத்துவக்கல்லூரி முதல்வர் எட்வின்ஜோ, துணை ஆணையர் காந்திமதி, வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சவுந்தரவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.