கோவை தென்னமநல்லூர் பகுதில் உள்ள கரியகாளி அம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தென்னமநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை உதவி ஆய்வாளர் ரவிசந்திரன் சோதனை நடத்தினார். இதனை தொடர்ந்து அங்கு இருந்த மொசையன் (66) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின் அவர் வைத்திருந்த 300 கிராம் கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் காவல்துறையினர் அவரிடம் விசாரித்ததில் காந்தி காலனி பகுதில் சிலர் கஞ்சா விற்பதாகவும் அவர் கூறினார். இதற்கு தொடர்பு உடையவர்களை தென்னமநல்லூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.