கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்தவர் கீதாஆனந்த் (47). இவர் மதுக்கரை பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து மதுக்கரை செல்லும் பேருந்தில் ஏறிச்சென்றார். இவரை பின் தொடர்ந்த மூன்று வாலிபர்கள் கீதாஆனந்திடம் தவறாக நடந்து கொண்டனர். அவர்கள் ஆபாச வார்த்தைகளாலும் பேசிக் கொண்டனர். பேருந்தில் கீதாஆனந்த் கூச்சலிட்ட போது, அந்த மூன்று வாலிபர்களின் ஒருவர் பேருந்தில் இறங்கி ஓடினார். மற்றவர்களை அருகில் உள்ள உக்கடம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்த வாலிபர்கள் ஜி.எம் நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (21), கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ரியாசுதீன் (21) இவர்கள் மீது உக்கடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.