கோவை பூசாரிபாளையம் பகுதி அருகே அச்சுறுத்தும் நிலையில் உள்ள பெண்கள் கழிப்பிடத்தை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை, பூசாரிபாளையம் அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பெண்கள் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது, ஆனால் போதிய மறைப்புகள் இல்லாததாலும், அதை ஒட்டியே ஆண்கள் கழிப்பிடம் கட்டப்பட்ட வருவதால் பெண்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தகரத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பிடத்தின் மீது வேளாண் பல்கலை கழகத்தை ஒட்டியுள்ள மரம் உடைந்து விழுந்துள்ளது, அதுவும் இது வரை அகற்றபடவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
அதேபோல் அப்பகுதி அருகே மாநகராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்டுள்ள பொதுகழிப்பிடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சில நபர்கள் பத்து வயது சிறுவனை கழிப்பிடத்திற்கு பின்னால் அழைத்து சென்று கட்டி போட்டு சராமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த சிறுவனுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் போதிய பாதுக்காப்பு இல்லாத நிலையில் கழிப்பிடங்கள் உள்ளதால் அப்பகுதி பெண்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.