கோவை சாடிவயல் யானைகள் முகாம் பகுதியில் சிகிச்சை அளிக்கப்பட்ட பெண் காட்டு யானை எழுந்து நின்று நடக்க துவங்கியது. தொடர்ந்து இருதினங்கள் யானைக்கு சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளதாக வனத்துறை மருத்துவர் மனோகரன் தெரிவித்தார்.
கோவை, பெரிய தடாகம் பகுதியில் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய பெண் காட்டு யானைக்கு வனத்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் வனப்பகுதியில் யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படவே பெண் காட்டு யானையை நேற்றுமாலை சாடிவயல் யானைகள் முகாமிற்கு கொண்டு வந்தனர். சாடிவயல் யானைகள் முகாமில் யானைக்கு வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். யானைக்கு ஆயில் மசாஜ் செய்யப்பட்டதுடன் விட்டமின் மற்றும் ஊட்டச்சத்து மருந்துக்களும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தொடர் சிகிச்சையின் பலனாக இன்று பிற்பகல் காட்டு யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து கிரேன் உதவியுடன் பெண் காட்டு யானையை வனத்துறை அதிகாரிகள் தூக்கி நிறுத்தினர். எழுந்து நின்ற யானை தண்ணீர் குடித்ததுடன், உணவையும் தானாக உட்கொள்ள துவங்கியது. யானையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிள்ளதாகவும் தொடர்ந்து இரு தினங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகவும் வனத்துறை மருத்துவர் மனோகரன் தெரிவித்தார். இரு தினங்கள் சிகிச்சைக்கு பின்னரே தானாக உணவு தேடும் அளவிற்கு காட்டுயானையின் உடல் நிலை வலுப்பெறும் எனவும் அதுவரை தொடர்ந்து யானை கண்காணிப்பில் வைக்கப்படும் எனவும் தெரிவித்தார். காட்டுயானையின் கால்கள் பெரிய கயிற்றால் கட்டப்பட்டு மரத்தில் கட்டப்பட்டுள்ளது. வனத்துறை மருத்துவர்கள் தொடர்ந்து யானையை கண்காணித்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக படுத்த நிலையில் கிடந்த பெண்யானை தானாக உணவு உட்கொள்வதுடன் மெதுவாக நடக்கவும் செய்வதால் வனத்துறையினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.