கோவை, கணபதி மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் அழகிரி. இவரது மகன் கருப்பசாமி (37). இவரும், இவரது மனைவியும் சனிக்கிழமையன்று வழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ளனர். பின் வேலை முடிந்து மாலை கருப்பசாமி வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்துள்ளது.
இதுகுறித்து, கருப்பசாமி சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததைத்தொடர்ந்து, காவல் துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். இருப்பினும் எவ்வித தடையங்களும் கிடைக்கவில்லை என காவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.