கோவை மாவட்டம் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள குளக்கரையில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அருள்மிகு பொங்காளியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள ஸ்தல விருட்சம் பலவருடங்கள் பழமைவாய்ந்தது. அதன் அருகில் உள்ள கோவில் சுயம்பு தீர்த்தக்கிணறு குறிச்சியின் பிரதான குடிநீராகவும், வற்றாத ஜீவகங்கையாகவும் விளங்கி வருகிறது. இத்தகைய, பழமைவாய்ந்த கோவிலை, கோவை - பொள்ளாச்சி நான்கு வழிப்பாதை அமைக்கும் பணிக்காக, அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே இதனை பாதுகாக்கப்பட வேண்டும் என ஸ்ரீ பொங்காளியம்மன் கோவில் பக்தர்கள் கோவை மாவட்ட நெடுஞ்சாலைத் துறை மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

எனவே இதனை பாதுகாக்கப்பட வேண்டும் என ஸ்ரீ பொங்காளியம்மன் கோவில் பக்தர்கள் கோவை மாவட்ட நெடுஞ்சாலைத் துறை மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.