கோவையை அடுத்த எட்டிமடை பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான நிலத்தை கேரளாவை சேர்ந்த ஷாஜி மற்றும் மைசூரை சேர்ந்த சதிர் ஆகியோர் குத்தகைக்கு எடுத்துள்ளனர். அந்த இடத்தில் கழிவுப்பொருட்களை தரம் பிரிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் கழிவு பொருட்களை கொட்டுவதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றுக்கொண்டு 23 லாரிகள் எட்டிமடை பகுதிக்கு வந்துள்ளது. ஏற்கனவே கொட்டப்பட்ட கழிவுகளால் கோபத்தில் இருந்த பொதுமக்கள் அந்த கழிவுப்பொருட்களை ஏற்றி வந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த லாரிகளில் மருத்துவக்கழுவு, இறைச்சி கழிவு, பிளாஸ்டிக் கழிவு, பழைய துணிகள் என பல விதமான கழுவுகள் கலந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவ இடத்தில் அதிமுகவை சேர்ந்த கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் சண்முகம் மற்றும் மதுக்கரை வட்டாச்சியர் சிவசங்கர், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில் கேரளாவில் இருந்து கழிவுகளை மொத்தமாக கொண்டுவந்து, அவற்றை தரம் பிரித்து விற்பனை செய்வதற்காக இந்த இடத்தை குடோனாக ஷாஜியும், சதிரும் பயன்படுத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து வருவாய் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.