அண்டை மாநிலங்களின் குப்பைக் கூடமா கோவை மாநகரம்...!

தமிழகத்தில் கோவை மாவட்டம் தனிச்சிறப்பு பெற்ற எழில் கொஞ்சும் நகரமாகும். கோவை மாவட்டத்தைச் சுற்றிலும் மலைப்பகுதிகள் உள்ளதால் எங்கும் பசுமை நிறைந்த விவசாய பூமியாக, எப்போதும் தட்பவெட்ப சூழ்நிலையில் மிதமாகவும், உயிரினங்களுக்கு ஏற்ற இடமாகவும் கோவை மாவட்டம் திகழ்கிறது.

இந்நிலையில் கோவைக்கு அண்டை மாநிலங்களில் இருந்து ஆபத்து வந்துகொண்டே இருக்கிறது என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை. 

மருத்துவக் கழிவுகள்: 

தமிழக- கேரள எல்லையான கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவக் கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். அதில், அந்த மருத்துக் கழிவுகளில் கேரள மொழியில் எழுத்துக்கள் இருந்ததைக் கொண்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், கோவை எட்டிமடை பகுதியில் மீண்டும் ஒரு அவலச்சம்பவம் அரங்கேறியுள்ளது. 

கோவை மாவட்டம், எட்டிமடை பகுதியைச் சேர்ந்தவர் காட்டமுத்து என்கிற பாலசுப்பிரமணியம். அவருக்கு அப்பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அதில் ஒரு பகுதியில் தக்காளியினை பயிரிட்டுள்ளார். மற்றொரு பகுதி தரிசு நிலமாக விடப்பட்டிருந்துள்ளது. இந்நிலையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிலர் அந்த இடத்தை ஒரு மாதத்திற்கு முன்பு குத்தகைக்கு வாங்கியுள்ளனர். அதற்காக காட்டமுத்துவிடம் வாடகையாக 7,500 ரூபாய் கொடுத்துள்ளனர். அந்த இடத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை பிரிக்கும் பணி நடத்தவுள்ளதாக கூறியுள்ளனர். இந்நிலையில், அங்கு கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. நான்கு நாட்களுக்கு முன்பு அப்பகுதியினை சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். நேற்று நள்ளிரவு எட்டிமடை பகுதியில் 23 லாரிகள் வந்துள்ளது. அப்போது அப்பகுதி மக்கள் வருவாய் துறையினருக்கு தகவல் 

தெரிவித்ததைத் தொடர்ந்து கோவை மாவட்ட வருவாய் துறை அலுவலர் கிருஸ்துராஜ், வட்டாட்சியர் சிவசங்கரன் ஆகியோர் இப்பகுதிக்கு வந்து 23 லாரிகளையும் சோதனையிட்டுள்ளனர். அதில், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



யார் காரணம் ?

ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு சரக்கு உள்ளிட்ட பொருட்கள் கொண்டுவரும் போது சோதனைச் சாவடியில் பரிசோதித்து, அதற்குறிய வரியினை விதித்து அனுப்புவது வழக்கம். தற்போது கேரளாவில் இருந்து இந்த கழிவுப் பொருட்களை லாரிகளில் கொண்டுவரும் போது கேரள எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில் பரிசோதித்து விட்டு லாரிகளில் பிளாஸ்ட்டிக் பொருட்கள் உள்ளன என அங்கீகாரம் தந்து அனுப்பியுள்ளனர். பின், கோவை எல்லையான க.க. சாவடி சோதனைச் சாவடியிலும் அந்த லாரி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அங்கு சோதனையிட்டு அதில் மருத்துவக் கழிவுகள் உள்ளன என தெரிந்தும் சோதனை சாவடி ஊழியர்கள் அனுப்பியுள்ளனர். மேலும், அவர்கள் ஒரு லாரிக்கு 200 ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற லஞ்சம் பெற்றுதான் சோதனைச் சாவடி ஊழியர்கள் பல கழிவுப் பொருட்களை கோவை மாவட்டத்திற்குள் அனுமதிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.



விவசாயத்தின் நிலை என்னாவது ? 

தவறுதலாகவும், தவறாகவும் செயல்படும் அரசு அதிகாரிகளால் செய்யப்படும் இதுபோன்ற ஒரு சில அவலச் சம்பவங்களால் எட்டிமடை பகுதியில் உள்ள பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலம் தரிசு நிலங்களாக மாறிவருகிறது. இங்கு பயிரிடப்படும் வாழை, தென்னை, தக்காளி போன்ற விளைச்சல் பயிர்கள் முற்றிலும் நாசமாகி வருகின்றன. இதுபோன்ற அதிகாரிகளின் செயல்களால், பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிகப்படியான நச்சுத் தன்மை கொண்ட மருத்துவக் கழிவுகள் கோவையில் கொட்டப்படுகின்றன. இந்த மருத்துவக் கழிவு கொட்டப்பட்டு உள்ள இடத்தில் மழையோ, வெயிலோ வந்திருந்தால் அந்த மருந்தின் நச்சுத் தன்மை நிலத்தடியில் சென்று சுற்றியுள்ள பல ஏக்கர் நிலத்தினை பாழ்படுத்தியிருக்கும். இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத அரசு அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என எட்டிமடை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்கள் ஊரு குப்பைத் தொட்டியா ?

கோவையில் இருந்து பல நூறு வாழை மரங்களை கேரளாவிற்கு அனுப்பும் போது, அதில் ஒரு மரம் சற்று அழுகியிருந்தாலே அதனை கேரள சோதனைச் சாவடி அதிகாரிகள் அனுமதிப்பது இல்லை. ஆனால், தமிழக அதிகாரிகள் கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் உயிரைப் பறிக்கும் நச்சு மருத்துவக் கழிவுகளை கோவையில் கொட்ட அனுமதிப்பது மிகவும் வேதனைக்கு உரிய செயலாகும். 



இவ்வாறு செயல்படும் அதிகாரிகளை உடனடியாக முறைப்படுத்த வேண்டும். சோதனைச் சாவடி ஊழியர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற முறைகேடுகள் இரவு நேரங்களிலேயே அதிகளவில் நடப்பதால் அதிகாரிகள் சோதனைச் சாவடிகளில் இரவு நேரங்களில் சோதனை நடத்த வேண்டும். 

எனவே, இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தொடர்ந்து லஞ்சம் வாங்கி வரும் அதிகாரிகள் மீது தக்கநடவடிக்கை எடுத்து அழிவின் விழிம்பில் இருந்து கோவை மாநகரத்தின் பசுமையை பாதுகாக்க வேண்டும் என்பது கோவை மாவட்ட மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...