பாகிஸ்தான் குவெட்டா தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 57ஆக உயர்வு

குவெட்டா: பாகிஸ்தானின் குவெட்டா காவல் பயிற்சி மையத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57ஆக உயர்ந்துள்ளது.91 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவின் காவல் பயிற்சி மையத்தில், திங்கட்கிழமை நள்ளிரவில் புகுந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில் பலியான பயிற்சி போலீசாரின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. 91 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவின் காவல் பயிற்சி மையம் உள்ளது. இங்கு நள்ளிரவில் புகுந்த தீவிரவாத கும்பல் அங்கு பயிற்சி காவலர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டது. அங்கிருந்த நூற்றுக்கணக்கான பயிற்சிக் காவலர்களையும் பிணை கைதிகாளவும் பிடித்து வைத்துக்கொண்டனர். இந்த தாக்குதலில் காவல் பயிற்சி மையத்தில், இருந்த காவலர்கள் 33 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

தீவிரவாதிகளுக்கும், காவலர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதனிடையே தீவிரவாதிகள் தாக்கியதில் பலியான காவலர்களின் எண்ணிக்கை தற்போது 57ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தவிர, இச்சம்பவத்தில் 91 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவலர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டை முடிவுக்கு வந்தது. இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் பயிற்சி மையத்தில் இருந்த 200 முதல் 600 காவல் அதிகாரிகள் பத்திரமாக மீட்டக்கப்பட்டுள்ளனர். 3 தீவீரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

நள்ளிரவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது என பலோசிஸ்தான் மாகாண உள்துறை அமைச்சர் உறுதிபடுத்தியுள்ளார். காவலர் பயிற்சி முகாமில் தாக்குதல் நடத்தியது லக்ஷர் இ ஜவாங்கி அமைப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...