தமிழக மக்கள் சர்க்கரையின்றி, பருப்பின்றி, பலகாரமின்றி பச்சைத் தண்ணியில் தீபாவளி கொண்டாட உள்ளனர் என மாதர் சங்கத்தினர் நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரேசன் கடைகளில் பருப்பு, சர்க்கரை, எண்ணை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. உள்ளூர் மக்களின் தேவையை சிறிதும் நினைக்காமல் மத்திய அரசு அதிகளவில் வெளிநாடுகளுக்கு இத்தகையப் பொருட்களை ஏற்றுமதி செய்ததே இதற்குக் காரணம். மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் உடல் நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்காலிக முதல்வர் பொறுப்பில் உள்ள பன்னீர்செல்வமும் மக்களின் நலனில் அக்கரை செலுத்தாமல் செயல்பட்டு வருகிறார்.
உடனடியாக அமைச்சரவை கூடி தீபாவளிக்கு முன்பு ரேசன் கடைகளில் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், வெறும் நீரில் தான் இந்த தீபாவளியை கொண்டாட நேரிடும் என மாதர் சங்க மாநில துணைத் தலைவர் அமிர்தம் தலைமையில் மாதர் சங்கத்தினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காந்திபுரம், காட்டூர் பகுதியில் உள்ள அனைத்திந்திய இளைஞர் பெறுமன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இதில், கோவை மாவட்ட மாதர் சங்க தலைவர் அமுதா, செயலாளர் ராதிகா, பொருளாளர் ஜோதிமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.