கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 2012 ஆம் ஆண்டு மரியா ஸ்டெல்லா (57) என்ற பெண் இரண்டாம் நிலை ஆய்வாளராக வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவர் வேலைக்குச் செல்லவில்லை. இதனைத்தொடர்ந்து, மண்டல சுகாதார ஆய்வாளர் சாந்தகுமாரி, அலுவலகத்தில் இருந்த மரியா ஸ்டெல்லாவின் சான்றிதழ்களை சோதனையிட்டுள்ளார். இதில், அவர் தனது வயதில் 5 வயதினைக் குறைத்து, போலி சான்றிதழ் சமர்ப்பித்து பணிக்குச் சேர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, துடியலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.