கோவை ஜெம் மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் டாக்டர் சி.பழனிவேலு, மிகச் சிறந்த மருத்துவர் என்ற பிரிவில் இரண்டாவது முறையாக டாக்டர் பி.சி.ராய் விருதைப் பெறவுள்ளார்.
மருத்துவத் துறையில் வழங்கப்படும் விருதுகளில் டாக்டர் பி.சி.ராய் விருது மிகவும் உயர்ந்ததாகும். இந்திய அரசாங்கம் டாக்டர் பி.சி.ராய் பெயரில் தேசிய மானியக் குழுவை அமைத்துள்ளது. இது மருத்துவத்துறையில் பல பிரிவுகளில் சாதனை படைத்தவர்களை பாராட்டி வழங்கப்படும் விருதாகும்.
இந்திய ஜனாதிபதி இவர்களுக்கு பதக்கங்கள், பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் ரூ.1 லட்சம் நிதியாக வழங்கி கௌரவிப்பார்.
2006 ஆம் ஆண்டில் டாக்டர் சி.பழனிவேலு லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மற்றும் ஜீரண மண்டல சிறப்பு சிகிச்சை பிரிவிற்காக டாக்டர் பி.சி.ராய் விருதை பெற்றார்.
2015 ஆம் ஆண்டிற்கான மிகச் சிறந்த மதிக்கத்தக்க டாக்டர் பி.சி.ராய் விருதை சிறந்த மருத்துவர் என்ற பிரிவில் இரண்டாவது முறையாக தற்போது பெறுகிறார்.