தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் கோவையின் முக்கிய நகரங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. வெளியூர்களுக்கு செல்பவர்கள், புத்தாடை வாங்குபவர்கள் போன்றோர் பேருந்து நிலையங்களிலும், கடைவீதிகளிலும் குவிந்துள்ளனர். இந்த கூட்ட நெரிசலை தடுக்க கோவை மாநகர காவல் துறையின் இணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் தலைமையில் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் போக்குவரத்து காவலர்கள் எதிர்வரும் தீபாவளி பண்டிகை சுற்றுச்சூழல் மாசிலிருந்து தங்களை காத்துக்கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கு பாதுகாப்பு சுவாச கவசங்களை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கதினர் இன்று வழங்கினர். மாவட்ட காவல்துறை ஆணையாளரின் அலுவலகத்தில், மாநகர காவல் துறையின் இணை ஆணையர், போக்குவரத்து சரவணன் முன்னிலையில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.