ஏர் இண்டியா நிறுவனத்தில் கேபின் குரு பயிற்சி காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் விண்ணபதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏர் இண்டியா நிறுவனத்தில் 300 கேபின் குரு பயிற்சி காலிப் பணியிடங்களை நிரப்ப திருமணம் ஆகாத இளம் ஆண், பெண் இருபாலரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த காலிப்பணியிடங்கள் தெற்கு மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு, பெங்களூர், ஹைதராபாத், கோழிக்கோடு ஆகிய இடங்களுக்கு உரியவை ஆகும். இதற்கு விண்ணப்பிப்போர் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், டிகிரி அல்லது டிப்பளமோவில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி மூன்று வருட படிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மேலும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர்க்கு வயது மற்றும் உயர வரம்பில் தளர்வு ஏற்படுத்தப்படும். விண்ணப்பதாரர் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நன்றாக பேச, எழுத புலமை பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணபதாரர் www.airindia.in என்ற இணையதளத்தில் நவம்பர் 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடத்திற்கான எழுத்துத் தேர்விற்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.