தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கிலப் பத்திரிகை தமிழக அளவில் கல்விச் சேவையில் சிறப்பாக செயலாற்றும் கல்வி நிறுவன அறங்காவலர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கண்டறிந்து அவர்களின் சிறந்த சேவைக்காக கல்வியாளர் விருதினை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வழங்கியது.

இதில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி சிறந்த கல்வியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த கல்வியாளர் எடுய்கான் விருது வழங்கப்பட்டுள்ளது.

இவர் கோவையில் குனியமுத்தூரில் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவைப்புதூரில் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை நடத்தி வருகிறார். இந்நிறுவனங்களில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
இந்நிறுவனங்களை சிறப்பாக வழிநடத்தி வருவதற்காகவும், சிறப்பான கல்விச் சேவைக்காகவும், சிறந்த தலைமைப் பண்பு, நிறுவனங்களை வழிநடத்தும் முறை, கல்விச் சேவையில் மாற்றம் ஏற்படுத்திய செயல்களுக்காக பாராட்டி இவ்விருதினை இக்கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழிக்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் சென்னை பதிப்பகத்தின் துணைத் தலைவர் மற்றும் பொறுப்புக் குழுத் தலைவர் ஆனந்த் மூர்த்தி, தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சில் தலைவர் மெய்-கிவைய் பார்க்கர் மற்றும் நாக் குழுவின் ஆலோசகர் ஷியாம் சுந்தர் ஆகியோர் உடன் இருந்தனர்.