நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையல் இன்று கோவையில் வடமாநில மாநிலத்தை சேர்ந்தவர்கள் இன்று தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.
இந்துகளின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். தொழில் நகரமான கோவையில் ராஜஸ்தான், ஒரிசா,கொல்கத்தா உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கோவை ஆர்.எஸ் புரம், காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே வட மாநிலத்தவர்கள் குடும்பத்துடன் அவர்களுடைய கோவில்களுக்கு சென்று பின்னர் வீடுகளில் பூஜை செய்து, புத்தாடை அணிந்து தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
மேலும், இப்பண்டிகை தினத்தில் சுற்றுப்புற சூழலை மாசுப் படுத்தும் பட்டாசுகளை வெடிகக போவது இல்லை என்றும் ஒருசிலர் தெரிவித்துள்ளனர். தீபாவளி தினத்தன்று இரவு நேரங்களில் மட்டுமே பூஜைகள் செய்து வழிப்படுவது வழக்கம் என்றும், இவ்வருடம் சூரிய கிரகனம் பகலில் வருவதால், காலையிலேயே பூஜைகள் செய்து வழிபடுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் பண்டிகையை முன்னிட்டு ஜெயின் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகிறது.