கோவை திருமலையாம் பாளையம் விவசாய நிலத்திற்குள் இரண்டாவது நாளாக புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த 600 க்கும் மேற்ப்பட்ட வாழை மரங்களை நாசம் செய்தது, வனத்துறை அலட்சியத்தால் விவசாய பயிர்கள் நாசமடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை திருமலையாம் பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பரின் தோட்டத்திற்குள் நேற்று முன் தினம் புகுந்த 13 காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்ட ஒரு ஏக்கர் தக்காளி பயிர் மற்றும் தென்னை, வாழை , தேக்கு மரங்களை நாசம் செய்தது, இதை அடுத்து விடிய விடிய போராடி யானை காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டது, இதை தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று இரவு 11 மணியளவில் 3 குட்டிகளுடன் மொத்தம் 9 யானைகள் பக்கத்துத்தோட்டமான கோயஸ் தோட்டம் உரிமையாளர் பி.வி. முகமது தாஷிர் என்பரின் தோட்டத்தில் புகுந்து அங்கு பயிரிடப்பட்ட 600 க்கும் மேற்ப்பட்ட வாழை மரங்களையும் முற்றிலுமாக நாசம் செய்தது.
மேலும் சுற்றுச்சுவரை உடைத்து அங்குள்ள ஒரு தொழிற்சாலைக்குள் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. மாலை 3 மணிக்கே வருவதாக கூறிய வனத்துறையினர், இரவு ஒரு மணி வரை வராத்தால் அப்பகுதி விவசாயிகளே வனத்திற்குள் விரட்டியடித்தனர். வனத்துறைத்துறையினர் அலச்சியபோக்கே இந்த நாசத்திற்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் விரட்டியடிக்கப்பட்ட யானைகள் பக்கத்துத்தோட்டதிற்குள் நுழைந்ததால் இரவு முழுவதும் தூங்காமல் அப்பகுதி விவசாயிகள் விழித்திருக்க நிலை ஏற்ப்பட்டது குறிப்பிடத்தக்கது.