கோவையில் நேற்றிரவு பெய்த கனமழையால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. முக்கியமாக புரூக் பாண்ட் சாலை அருகே உள்ள கிக்கானிக் பள்ளி செல்லும் வழியில் ரயில் பாலம் கீழே உள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் அப்பகுதிகளில் செல்லும் வாகனங்கள் திருப்பி விடப்பபட்டு வருகிறது. உப்பிலிபாளையம் மேம்பாலம் அருகே போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.





