கோவை மாநகராட்சி ஆணையாளரை பசுமைத்தீர்ப்பாயம் நேரில் ஆஜராக உத்தரவு !



கோவை வெள்ளளூர் குப்பைக்கிடங்கு அமைந்துள்ள பகுதியில் குடிநீர் மாசுபடுவதையொட்டி அளிக்கப்பட்ட புகாரில் நேரில் ஆஜராகாத கோவை மாநகராட்சி ஆனையாளர் விஜயகார்த்திகேயனுக்கு தென் மண்டலபசுமைத்தீர்ப்பாயம் இன்று நேரில் ஆஜராக அதிரடி உத்தரவு  பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை சிங்காநல்லூர் அடுத்த வெள்ளலூரில் ஆயிரக்கணக்கான குடியிருப்பகள் உள்ளது. இதில் கோவை மாநகராட்சியின் 600 ஏக்கர் நிலப்பரப்பளவில் சுமார் 150 ஏக்கர் நிலத்தில் கோவை மாநகரட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். இந்த கழிவுகள் கொட்டப்படுவதால்   நோய் பரப்பும்  ஈக்கள் உள்ளிட்ட பூச்சிகளின் படையெடுப்பால் இங்குள்ள மக்கள் பெரும் உடல் உபாதகைகளுக்கு ஆளாகின்றனர். இதனையடுத்து இப்பகுதி மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த குப்பைக்கிடங்கில் உள்ள கழிவுகளில் இருந்து வெளியாகும் நட்சுக்களால் நிலத்தடி நீர் மாசடைவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனையடுத்து மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர், ஈஸ்வரன் பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப்பட்டதின் பேரில் விசாரனைக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என கோவை மாநகராட்சி ஆனையாளர் விஜயகார்த்திகேயனுக்கு உத்தரவிட்டது. தொடர்ச்சியாக மூன்றுமுறை சம்மன் அனுப்பப்பட்டு நேரில் ஆஜராகதாதால் திங்களன்று விசாரனை மேற்கொண்ட தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் நேரில் ஆஜராக அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். மேலும் நவம்பர் 23 தேதிக்குள் ஆஜராக வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...