டெல்லியில் உள்ள நரேலா தொழிற்சாலை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தீ
விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு 18 தீயணைப்பு வண்டிகளுடன் வந்த
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில்
பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.