கோவையில் செயல்பட்டு வரும் சர்தார் வல்லபாய் பட்டேல் பன்னாட்டு ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் திங்களன்று (இன்று) சர்தார் வல்லபாய் பட்டேல் ஜெயந்தி விழாவும், லஞ்ச ஒழிப்பு வார விழாவும் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தேசிய ஜவுளித் துறை நிர்வாக இயக்குநர் அருள்சாமி கலந்து கொண்டார். தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியேற்ற மாணவர்களிடையே அருள்சாமி பேசுகையில் ''தேசம், நாடு, மக்கள் என்று வரும் போது நலத்துடன் ஒற்றுமையுடன் செயல்பட்டு சர்தார் வல்லபாய் பட்டேலின் எண்ணங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். வளர்ந்துவரும் இளைஞர் சமுதாயம் லஞ்சம் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது. இந்த நாட்டில் எல்லா வளங்களும் உள்ளன. அவற்றினை முறையாக பயன்படுத்தி சமுதாக வளர்ச்சிக்கு உதவ வேண்டும். இந்தியா வல்லரசாகவும், நல்லரசாகவும் விளங்க ஒவ்வொருவரும் பங்களிக்க உறுதிமொழி ஏற்க வேண்டும்'' என்று கூறினார்.

மேலும், இவ்விழாவில் பங்குபேற்ற அனைவரும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவரும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் கல்லூரி இயக்குநர் முனைவர் சி.ரமேஷ்குமார் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.