திண்டுக்கல்லில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக் கொலை

திண்டுக்கல்லைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல் பாரதிபுரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பி.மணிமாறன் என்ற வாட்டார் மணி (38). ஆட்டோ ஓட்டுநரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்து மக்கள் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். பின்னர், இந்து முன்னணி அமைப்பில் இணைந்து மாவட்ட செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் மண்டலத் தலைவர் தர்மாவுடன், மணிமாறனுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாரதிபுரத்தில் உள்ள இந்து மக்கள் கட்சி அலுவலகம் அருகே திங்கள்கிழமை இரவு மணிமாறன் ஆட்டோவை நிறுத்தியுள்ளார்.

அப்போது, இந்து மக்கள் கட்சி நிர்வாகி தர்மா உள்ளிட்ட சிலர், மணிமாறனுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த மோதலில் கத்தியால் குத்தப்பட்ட மணிமாறன், அண்ணாநகரில் உள்ள தனது வீட்டை நோக்கி ஓடியுள்ளார். அவரை விடாமல் துரத்தி வந்த 2 நபர்கள், மணிமாறனின் வீட்டு வாசலில் அவரை வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். அப்போது, மணிமாறனைக் காப்பாற்ற முயன்ற அவரது மனைவி பிரியாவுக்கும் காயம் ஏற்பட்டது. 

பின்னர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மணிமாறன் உயிரிழந்தார்.

இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...