கோவை தொண்டமுத்தூர் ரோடு, பூசாரிப்பாளையம் அடுத்து பனைமரத்தூர் பகுதியில் 3 மாதகாலமாக நடுரோட்டில் தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது என அப்பகுதியில் வாழும் மக்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில்: 'தண்ணீர் குழாய் உடைந்து வீணாகிக் கொண்டிருப்பதை பல முறை கவுன்சிலரிடம் புகார் அளித்துள்ளோம். ஆனால் சரிசெய்து ஓரிருநாட்களில் மீண்டும் உடைந்து தண்ணீர் வழிந்தோடுகிறது.

மேலும் இப்பகுதியில் வீடுகள் பள்ளத்தில் அமைந்துள்ளதால் தண்ணீர் வீடுகளில் புகுந்து விடுவதாக கூறினர். 24 மணி நேரமும் நீர் தேங்கியே இருப்பதால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் வேளைக்கு செல்பவர்கள் மீது சேற்று நீரை இரைத்து செல்வதால் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இந்த குழாய் கசிவு பிரச்சனைக்கு நிரந்தரவு தீர்வினை மாநகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்,