கோவை மாவட்டம், குனியமுத்தூரை அடுத்த சுண்ணாம்புக் கால்வாய் பகுதியைச் சேர்ந்தவர் இக்பால் (50). இவர் திங்களன்று இரவு தனது காரினை வீட்டின் முன் நிறுத்திவிட்டு மழையில் நனையாமல் இருக்க அதனை மூடி வைத்துள்ளார். இந்நிலையில், இரவு மர்மநபர்கள் இவரது காரின் மீது தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இதில் காரின் வலது முன்பக்கம் முழுவதும் எரிந்து சேதமாகியது.
இதனைத்தொடர்ந்து, செவ்வாயன்று (இன்று) குனியமுத்தூர் காவல் நிலையத்தில் இக்பால் புகார் அளித்ததைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் காருக்கு தீ வைத்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.