கோவை ரைபில் கிளப்பை மேம்படுத்தும் முயற்சி தீவிரம்- காவல் ஆணையர்

கோவை பிஆர்எஸ் காவல் பயிற்சி மைதானத்தில் கடந்த 1956ம் வருடம் முதல் ரைபில் கிளப் இயங்கி வருகிறது. அங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், பிஆர்எஸ் ரைபில் கிளப்பை மேம்படுத்தப்பட உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது:- 

''இந்த ரைபில் கிளப்பில் 150-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 70 பேர் நிரந்திர உறுப்பினர்களாவர். நிரந்திர உறுப்பினர்களுக்கு வைப்புத் தொகையாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. அதுபோக மாணவ, மாணவிகளும் 125 பேர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால், இத்தகைய பெரிய தொகையினை அவர்கள் கட்ட முடியாது என்பதால் பள்ளி மாணவ, மாணவிகளிடம் குறைந்த கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. 

ரைபில் கிளப் 70 மீட்டர் நீலமும், 30 மீட்டர் அகலமும் கொண்டது. மொத்தம் 22 ஆயிரம் சதுர அடி அளவுக்கு ரைபில் எல்லை தற்போது உள்ளது. துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் போட்டிக்கு இது போதுமானதாக இல்லை. அதனால், பிஆர்எஸ் மைதானத்தில் உள்ள ரைபில் ரேஞ்சை பெரிதுபடுத்த அரசு நிதிக்கு விண்ணப்பித்துள்ளோம். இது கிடைத்தவுடன் விரைவில் பணி தொடங்கி விடும். மற்ற விளையாட்டுப் போட்டியைப் போல துப்பாக்கி சுடும் போட்டியினை தனியார் அமைப்புகள் நடத்த முடியாது. ரைபில் கிளப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மற்றும் ரைபில் கிளப் மூலமே இந்த போட்டியினை நடத்த முடியும். ரைபில் கிளப்பினை மேம்படுத்தும் பணி 2017 ஜனவரி அல்லது பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்'' என்று கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...