கோவை மாநகராட்சியில் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாயன்று (இன்று) மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில், மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் மரு.எம்.சந்தோஷ்குமார், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.