கூடுதல் கட்டணம் வசூலித்த வாகன நிறுத்தத்தின் உரிமம் ரத்து


கோவை, ராஜா வீதியில் மாநகராட்சிக்கு சொந்தமான வாகன நிறுத்தகம் செயல்பட்டு வருகிறது. மாநகராட்சியின் கீழ் ஒப்பந்த முறையில் செயல்படும் இந்த வாகன நிறுத்தத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்துவந்தனர். இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், அதிகாரிகளை அங்கு சோதனைக்காக அனுப்பினார். இதில், அந்த வாகன நிறுத்தத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இந்த வாகன நிறுத்தத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டார்.

பொதுமக்களை வஞ்சித்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வாகன நிறுத்தத்திற்கு எச்சரிக்கை, அபராதம், ஒப்பந்தத்திற்கு இடைக்காலத் தடை என எதுவும் விதிக்காமல் நேரிடையாக ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...