கோவையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
''சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது
வரவேற்கத்தக்கது. கேரள அரசு மீண்டும் சிறுவாணியின் குறுக்கே அணை கட்டும் முயற்சி மேற்கொள்ளுமானால் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு தைல மரங்கள் நட டி.என்.பி.எல் காகித நிறுவனம் முயற்சித்துவருவது கண்டனத்திற்குரியது. உடனடியாக இந்த முயற்சி கைவிடப்பட வேண்டும். இம்முயற்சி தொடருமானால் மக்களை திரட்டி தனது தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும்.
மேலும், கேரளாவில் இருந்து கோவைக்குள் மருத்துவக் கழிவுகள் கொண்டு வரப்படுவதை தடுக்க வேண்டும். இது தொடர்பாக சிறப்பு குழுக்கள் அமைத்து எல்லைச் சாவடிகளில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். இது குறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலம், நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் நட்பின் அடிப்படையில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவு அளிக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் அவருக்கு ஆதரவாக பிரச்சாரமும் மேற்கொள்ளப்படும்'' என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.