கோவையில் காதலியை தாக்கிய காதலன் கைது

திருமணம் செய்ய மறுத்த காதலியை பல்கலைக் கழக வளாகத்தின் உள்ளேயே கண்ணாடி பாட்டிலால் காதலன் 

தாக்கியதைத்தொடர்ந்து தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சிவில் பொறியியல் பட்டதாரி இளைஞரான வேம்புராஜ் என்பவருக்கும், கனகலட்சுமி என்பவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு சில காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், பாரதியார் பல்கலைக் கழகத்தில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்துவரும் கனகலட்சுமியைக் காண வேம்புராஜ் சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து இன்னும் ஒரு மாதத்திற்குள் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என வேம்புராஜ் கூறியதாகக் கூறப்படுகிறது. இதற்கு கனகலட்சுமி மறுப்பு தெரிவித்த நிலையில் ஆத்திரமடைந்த வேம்புராஜ் அருகில் இருந்த கண்ணாடி பாட்டிலால் கனகலட்சுமியின் கழுத்தில் பலமாக தாக்கிவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ரத்தவெள்ளத்தில் கிடந்த கனகலட்சுமியை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட வடவள்ளி காவல் துறையினர் வேம்புராஜின் மீது பெண் வன்கொடுமைச் சட்டம், தமிழ்நாடு மகளிர் துண்புறுத்துதல் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...