இந்த தீபாவளி பண்டிகையின் போது, சுற்றுசூழலுக்கு மாசுபாடு ஏற்படாத வண்ணம் தீபாவளி கொண்டாடுமாறு மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு அறிவிறுத்தப்பட்டது. மேலும், பசுமை தீபாவளி கொண்டாட்டத்தை, புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து மாநகராட்சி குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணிற்கு அன்ப்புமாறும் அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு, பசுமை தீபாவளியை சிறந்த் முறையில் கொண்டாடியவர்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பேருக்கு, இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் பாராட்டுவிழா நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட மாநகராட்சி ஆணையர் விஜயகார்திகேயன், பசுமை தீபாவளி கொண்டாடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

பாராட்டு விழாவில் கலந்து கொண்ட மக்கள் பசுமை தீபாவளி கொண்டாட்டம் குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர், பொதுமக்களுக்கு பசுமை தீபாவளி விருதுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.