கோவை மாவட்ட இந்து முன்னணியின் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டு வந்த சசிக்குமார் (36) கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதியன்று மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் அவ்வமைப்பினரால் கலவரங்கள் ஏற்பட்டன. கடைகள், வாகனங்கள், பேருந்துகள் என அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து, சசிக்குமாரின் இறுதி ஊர்வலத்திலும் வாகனங்களுக்கு தீ வைத்து கொழுத்தி அந்த அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இதற்கு போலீஸ் வாகனமும் இறையாகியது.
இதுகுறித்து, வழக்கு பதிவு செய்து கலவரத்தில் ஈடுபட்ட 800க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் சிலருக்கு மட்டும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. மேலும், சிலரது மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.
இந்நிலையில், சசிகுமார் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறையின் தொடர்பாக தற்போது என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன், சக்திகுமார், மோகன்ராஜ் ஆகிய 3 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.