கோவை ராஜ வீதியில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக உக்கடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, அங்கு சென்ற தனிப்படை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, விபச்சாரம் நடப்பது தெரியவந்தது. தொடர்ந்து, விபச்சார புரோக்கர்களான கேரள மாநிலத்தை சேர்ந்த திலிப்(29), வேனு (32), சுதீஷ் (35)/ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கேரள மாநிலத்தை சேர்ந்த 2 பெண்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
மற்றொரு சம்பவம்:-
சாய்பாபகாலனி பகுதியில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, அப்பகுதி போலீசார் அழகேசன் சாலையில் உள்ள மசாஜ் சென்டரில் சோதனை நடத்தி, பெண் விபச்சார புரோக்கரான கேரள மாநிலத்தை சேர்ந்த பிரியா ஜோசப் (42)/என்பவரும், லிபின் ஜார்ஜ் என்பவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 46வயது பெண்ணை மீட்ட போலீசார் அவரை அரசு காப்பகத்துக்கு அனுப்பினர்.