மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (20). ஆட்டோ ஓட்டுனர். இவர் நேற்று காலை, கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட சென்றார். அப்போது, அங்கு வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டியதோடு, சரவணன் வைத்திருந்த 11 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை திருடிக்கொண்டு ஓட முயன்றார்.
சரவணன் கூச்சலிடவே, அப்பகுதி மக்கள், வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் மேட்டுப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பதும், இவர் மீது செயின்பறிப்பு, வழிப்பறி உட்பட 9 க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரிவந்தது. தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிந்த போலீசார், கைது செய்து சிறையிலடைத்தனர்.