கோவை வடவள்ளி அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2008-2009 வரை கோவை அண்ணா பல்கலைகழகத்தின் துணை வேந்தராக பணியாற்றினார்.
இவர் மீது, தனது பதவிகாலத்தின் போது பல்கலைகழகத்திற்கு சேர், பெஞ்சுகள் வாங்கியதில் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. இதற்காக பல்கலைக்கழக காண்டிராக்டர் செந்தில்குமாரிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று கோவை லஞ்ச ஒழிப்பு நீதி மன்றதில் தீர்ப்புக்காக வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மதுரசேகர், முன்னாள் துணைவேந்தருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 1 லட்சத்து 10 ஆயிரமும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.