எஸ்என்ஆர் கல்லூரியில் சென்னையின் எஃப்சி வீரர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி

எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பைவலைவ் அறிமுகம் எஸ்என்ஆர் கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், கால்பந்து விளையாட்டு சென்னையின் எஃப்சி வீரர்கள் கலந்து கொண்டனர்.எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரி மற்றும் சென்னை ஆன்லீஷ் விளையாட்டு எல்எல்பி நிறுவனம் இணைந்து 8,000 சதுர அடி இடத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதி அமைக்க ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. சுமார் ஒரு கோடி செலவில் எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரியில் இந்த புல்தரை கால்பந்து வசதி "பைவலைவ்" முத்திரையுடன் சர்வதேச தரத்தில் பிப்ரவரி 2017ல் அமைய உள்ளது. வழக்கமான போட்டிகள் முகாம்கள் நடத்த பள்ளிகள், கல்லூரிகள், பெருநிறுவனங்கள் உதவியுடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.



பின்னர் நிகழ்ச்சியில், சென்னையின் எஃப்சி வீரர்கள் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கால்பந்து வீரர்களான ஜெஜெ  (இந்தியாவின் சிறந்த வீரர்) காங்கெபாம் தொய் சிங் (தற்காலிக பெங்களூரு எஃப்சி வீரர் - சென்னையின் எஃப்சி வீரர் இந்திய சூப்பர் லீக் மிட்ஃபீல்டராக இருக்கும் கால்பந்து வீரர்) ஈடர் மோன்டெய்ரா பெர்னாண்டஸ், ஏதேர் என அழைக்கப்படும், சென்னையின் எஃப்சி வீரர் பிரேசிலிய கால்பந்து வீரர்) மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.

இதில், ஸ்ரீ ராமகிருஷ்ணா குழும நிறுவனங்களில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகி சுந்தர், தலைமை வர்த்தக அதிகாரி ஸ்வாதி ரோஹித், முதன்மை செயல் அதிகாரி சி வி ராம்குமார், எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரி முதல்வர் கருணாகரன், கோவை கால்பந்து கழக செயலாளர் ராஜா, நிறுவனங்களின் தலைவர்கள், கல்வியாளர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...