சென்னை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீப திருவிழா இந்த ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து 9-ம் தேதியன்று தேரோட்டம் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான அண்ணாமலையார் மலையில் மகா தீபம் 12-ம் தேதி ஏற்றப்படுகிறது. பின் 13-ம் தேதி பௌர்ணமி கிரிவலம் நடைபெற உள்ளது. சுமார் 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழாவில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
இதனையடுத்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக தலைநகர் சென்னையிலிருந்து 600 பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் சேலம், வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, திருச்சி, நாகை, புதுச்சேரி உட்பட பல்வேறு இடங்களில் இருந்து 2,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.