ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் எல்லையில் ஊடுருவ 300 தீவிரவாதிகள் காத்திருப்பதால் எல்லையில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 2 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டதில் பாகிஸ்தான் வீரர்களும் கொல்லப்பட்டனர். இதே வேலையில் பூஞ்ச் வட்டாரத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்தனர்.
இதை தொடர்ந்து ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை நீடிக்கிறது. இதில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பாட்டார். இந்நிலையில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ 250 முதல் 300 தீவிரவாதிகள் முயன்றதாக காஷ்மீர் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கு வசதியாக இந்திய படையினரை திசை திருப்பவே பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே காஷ்மீரில் மர்மநபர்களால் பள்ளிகளுக்கு தீ வைக்கப்படுவதும் தொடர்ந்து நீடித்து வருகிறது.